Check out our Video version of the Saviour’s Call
[Video Version] | [Français] | [English] |[Español] | [Yoruba] | [Duetsch] | [ខ្មែរ។] | [தமிழ்] | [বাংলা] | [Italiano] | [తెలుగు]
ஜெபம்:
தயவுசெய்து இந்த ஜெபத்தை சத்தமாக மற்றும் இருதயத்திலிருந்து திரும்ப சொல்லவும்:
HTML clipboard
பரலோகத்தில் இருக்கிற பிதாவே,
இயேசுவானவரின் நாமத்திலே நான் உம்மிடம் வருகிறேன்.
இயேசுவானவர் உம்முடைய ஒரேபேரான குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன்.
நான் இரட்சிக்கப்படும்படியாக வானத்திலும் பூமியிலும் கொடுக்கப்பட்ட நாமம் அவருடைய நாமம் ஒன்று மட்டுமே என்று நான் விசுவாசிக்கிறேன்.
அவரை நீர் எனக்காக அனுப்பினீர் என்று நான் விசுவாசிக்கிறேன்.
அவர் எனக்காக மரித்தார் என்று நான் விசுவாசிக்கிறேன்.
அவருடைய இரத்தம் என்னுடைய எல்லா பாவங்களையும் மூடும் என்று நான் விசுவாசிக்கிறேன்.
மற்றும் என்னுடைய கடந்த கால பொல்லாதவைகளிலிருந்து நான் மனஸ்தாபப்பட்டு திரும்பி விடுகிறேன்.
கர்த்தராகிய இயேசுவானவரே, நான் உமக்குக் கொடுக்கிறேன்,
என்னுடைய முழு இருதயத்தையும்,
என்னுடைய முழு வாழ்க்கையையும்.
என்னுடைய வாழ்க்கையின் எஜமானாக உம்மை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன்,
இப்பொழுதிருந்து உமது வழியில் நான் காரியங்களைச் செய்கிறேன்!
கர்த்தராகிய இயேசுவானவரே என்னுடைய வாழ்க்கையில் இப்பொழுது வாரும்
மற்றும் உம்முடைய ஆவியினால் என்னை நிரப்பும்.
தயவுசெய்து என்னை ஒரு புதுசிருஷ்டியாக மாற்றும்!
இப்பொழுது நான் ஒரு கிறிஸ்தவன் என்று,
அறியும்படி செய்யும்!
இப்பொழுது நான் மறுபடியும் பிறந்தவன் என்று,
அறியும்படி செய்யும்!
நான் இரட்சிக்கப்பட்டேன்,
நான் வெற்றியை பெற்றுக்கொண்டேன்!
நான் விடுதலையானவன்,
நான் என்றென்றும் ஜீவிக்கிரவன்!
பரலோகத்தை நோக்கி இருக்கிறேன்!
நரகத்தை மறுதலிக்கிறேன்!
இப்பொழுது நான் ஒரு தேவனுடைய பிள்ளை என்று,
அறியும்படி செய்யும்.
இயேசுவானவரே உமக்கு நன்றி!
கர்த்தாவே உமக்கு நன்றி!
இப்பொழுது உமது பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பும்.
என்னுடைய வாழ்க்கையை உமது இரட்சிப்பின் கிருபைக்கு,
ஒரு இறுதி விருப்ப ஆவணமாக மாற்றும்.
இயேசுவானவரின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன்
ஆமென்
தயவுசெய்து நாங்கள் அறியும்படி செய்யும்! சிறிது நேரம் எடுத்துக்கொண்டு தயவுசெய்து எங்களுக்கு எழுதவும் மற்றும் உங்களுடைய சாட்சியை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்! [என்னை தொடர்புகொள்ள இங்கே கிளிக் செய்யவும்]
நாங்கள் உனக்காக ஜெபிக்க விரும்புகிறோம் மற்றும் உனது புதிய கிறிஸ்தவ நடக்கையில் உனக்கு உதவிசெய்ய சில இலவசமான தகவல்களை அனுப்புகிறோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நீர் ஒரு ஜெபத்துக்குப் பதிலாக இருக்கிறீர்.
எனது நண்பரே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக!
லின் சாப்பார்ட்
டைரக்டர், பலிபீட ஊழியம் என்னை தொடர்புகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள்,
அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்
மத்தேயு 7:7